பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா | 50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை | ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு | ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை ஸ்ரீ லீலா தற்போது டிரென்டிங் ஹீரோயின் ஆக வலம் வருகிறார் .இவரின் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். தற்போது சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள "புஷ்பா 2" படத்தில் ஒரு பாடலுக்கு ஸ்ரீ லீலா நடனமாடியுள்ளார்.
புஷ்பா முதல் பாகத்தில் 'ஊ சொல்றியா' என்கிற பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடினார். இதே போல் புஷ்பா இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் இடம்பெறுகிறது. இதில் ஸ்ரீ லீலா நடனமாடுவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்த பாடலுக்காக ஸ்ரீ லீலா ரூ.2 கோடி சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 'ஊ சொல்றியா' பாடலுக்கு சமந்தா ரூ.5 கோடி வாங்கியது குறிப்பிடத்தக்கது. சமந்தாவை விட குறைவான சம்பளம் வாங்கினாலும், அவரை விட ஸ்ரீ லீலா நடனம் மூலம் அதிகம் கவர்ந்தவர். அதேநேரத்தில் சமந்தாவின் கவர்ச்சிக்காவும் அப்பாடல் பெரிய ஹிட்டானது. 'புஷ்பா 2' படத்தில் ஸ்ரீ லீலா ஆடும் பாடலும் அதேபோன்று கவர்ச்சியுடன் இருக்குமா என்பது படம் வெளியான பிறகே தெரிய வரும்.