ஒரே படத்தில் அறிமுகமாகும் சின்னத்திரை நடிகைகள் | மலையாள நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறிய நடிகை திடீர் பல்டி | நீதிமன்றத்தில் நியாயம் கேட்கும் நாய் | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போட்ட நடிகை | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் மவுன யுத்தம் நடத்திய ஏ.எல்.சீனிவாசன் | ''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ |
சமீபத்தில் ‛கங்குவா' படத்தின் எடிட்டரான நிஷாத் யூசுப் மரணித்த நிலையில் இப்போது மற்றொரு தமிழ் பட எடிட்டர் காலமானார். அவரது பெயர் உதய சங்கர். உடல் நலக்குறைவால் இவரது உயிர் பிரிந்தது. தமிழ் சினிமாவில் 46 படங்களுக்கு மேல் படத்தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக ஆர்கே செல்வமணியின் ஆஸ்தான எடிட்டர்களில் இவரும் ஒருவர் என்றே சொல்லலாம்.
ஆர்கே செல்வமணி இயக்கத்தில் பிரசாந்த் நடித்த ‛செம்பருத்தி' படத்தில் படத்தொகுப்பாளராக பணியாற்றியதன் மூலம் பிரபலமானார். தொடர்ந்து அவரின் ராஜ முத்திரை, மக்கள் ஆட்சி, அரசியல், குற்றப்பத்திரிக்கை போன்ற படங்களிலும் பணியாற்றினார். இதுதவிர பொண்டாட்டி ராஜ்ஜியம், ராஜாளி, புருஷன் பொண்டாட்டி என ஏராளமான படங்களுக்கு எடிட்டராக பணியாற்றி உள்ளார்.
இவரது சொந்த ஊர் சேலம். அவரது இறுதிச்சடங்கு நாளை அங்கு நடைபெற உள்ளது.