பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
சூர்யா, பாபி தியோல், திஷா படானி மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியான படம் 'கங்குவா'. படத்தைப் பார்த்த சூர்யா ரசிகர்கள் கூட கொஞ்சம் கலக்கத்திலேயே இருக்கிறார்கள். அத்தனை கோடி பட்ஜெட், அத்தனை உழைப்பு, அவ்வளவு நடிப்பு என அனைத்தும் வீணாகிவிட்டது என அவர்களது கருத்தாகவும் சொல்லி வருகிறார்கள்.
படம் வெளியாவதற்கு முன்பு இயக்குனர் சிவா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் அளித்த வீடியோ பேட்டிகளை துண்டு துண்டாக வெட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள். அதற்குள் படத்தை விமர்சித்து பல நெகட்டிவ் மீம்ஸ்களும் வலம் வர ஆரம்பித்துவிட்டன.
சிவாவின் சமீபத்திய பேட்டி ஒன்றில், “கங்குவா' படம் போல ஐந்தாறு கதைகள் என்னிடம் உள்ளன. ஒவ்வொன்றுமே கற்பனைக்கு எட்டாதவை. ஒவ்வொன்றும் வித்தியாசமான பின்னணி, கதைக்களம் கொண்டவை. கடவுள் ஆசி இருந்தால் அவற்றை இயக்குவேன்,” எனக் கூறியுள்ளார்.