ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு மாணவன் போட்ட வழக்கு : அமரன் பட செல்போன் எண் நீக்கம் | சூரி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! | ஒரு உயிர் பலி : சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது தெலங்கானா அரசு | புஷ்பா 2 - முதல்நாள் வசூல் முதல் கட்டத் தகவல் | டொவினோ தாமஸின் ‛ஐடென்டிடி' டீசர் வெளியானது | அரபு நாடுகளில் புஷ்பா 2 படத்தின் 19 நிமிட காட்சிகள் நீக்கம் | சுரேஷ் கோபி மகனுக்கு சண்டை சொல்லித்தரும் மம்முட்டி | புஷ்பா 2 - அமெரிக்காவில் முதல் நாளில் 4 மில்லியன் வசூல் | பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ : தெலுங்கில் சாதிப்பாரா ஜோதி கிருஷ்ணா | இறுதிக்கட்டத்தில் 'திருவள்ளுவர்' படம் : இளையராஜா இசை |
தெலுங்கில் வெளிவந்த 'பாகுபலி 2' படம் பான் இந்தியா படமாக வெளிவந்து 1000 கோடி வசூலைக் கடந்ததும் மற்ற மொழிகளிலும் 'பான் இந்தியா, 1000 கோடி வசூல்' என்ற ஆசை வந்தது. அதில் கன்னடத்தில் 'கேஜிஎப்', ஹிந்தியில் 'பதான், ஜவான்', தெலுங்கில் 'கல்கி 2898 எடி' அந்த 1000 கோடி வசூலைப் பெற்றன.
தமிழ் சினிமாவில் மட்டும் அந்த 1000 கோடி வசூல் வறட்சி நீடித்து வந்தது. இந்த வருடம் ஏதாவது ஒரு படம் அந்த சாதனையைப் புரிந்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அப்படி எதிர்பார்க்கப்பட்ட 'இந்தியன் 2, தி கோட், வேட்டையன்' ஆகிய படங்கள் ஏமாற்றத்தையே தந்தது. அதனால், இன்று வெளியான 'கங்குவா' படம் அந்த 1000 கோடி வறட்சியையும், ஏமாற்றத்தையும் போக்கும் என்று எதிர்பார்த்தார்கள்.
தமிழில் வெளிவரும் முதல் உண்மையான பான் இந்தியா படம் என்று நேற்று வரை 'கங்குவா' படத்தை விளம்பரப்படுத்தினார்கள். ஆனால், படம் வெளியாகி முதல் காட்சி முடிந்த உடனேயே படத்தின் ரிசல்ட் என்ன என்பது தெரிந்துவிட்டது. தயாரிப்பாளர் சொன்னது போல 2000 கோடி என்பது பேராசை என நிரூபணமாகிவிட்டது. அடுத்து 1000 கோடிக்கும் வாய்ப்பில்லை, 500 கோடிக்கும் வாய்ப்பில்லை என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் முதல் கட்டத் தகவலாகத் தெரிவிக்கிறார்கள்.
இந்த 2024ம் வருடத்தில் இனி வேறு எந்த பான் இந்தியா படமும் தமிழிலிருந்து வரப் போவதில்லை. 2025ல் எந்த நடிகர், எந்த இயக்குனர் அந்த உண்மையான பான் இந்தியா படத்தைக் கொடுத்து 1000 கோடி வசூலை தரப் போகிறார்கள்?.