ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
மலையாள திரையுலகில் கடந்த சில வருடங்களாகவே வாய்ப்பு கொடுப்பதற்காக நடிகைகளை தங்களுடன் அனுசரித்து செல்லும்படி பாலியல் ரீதியாக தொந்தரவு தரப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு சொல்லப்பட்டு வந்தது. சமீபத்தில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை அது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் பிரபல மலையாள இயக்குனரும் கேரளா திரைப்பட அகாடமியின் சேர்மன் ஆக பொறுப்பு வகித்து வருபவருமான ரஞ்சித் மீது பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். கடந்த 2009ல் ரஞ்சித் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான பாலேறி மாணிக்கம் படத்தில் நடிப்பதற்காக தான் கொச்சி வந்தபோது ஹோட்டல் அறையில் தன்னிடத்தில் இயக்குனர் ரஞ்சித் அத்துமீறி நடக்க முயற்சித்ததாகவும் அதனால் அந்த படத்தில் நடிக்காமல் திரும்பி சென்று விட்டதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் ஸ்ரீலேகாவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இயக்குனர் ரஞ்சித் அந்த கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இல்லை என்பதால் தான் அவர் நடிக்கவில்லை என்றும், அவர் கூறுவது போல் எந்த ஒரு விஷயமும் நடக்கவில்லை என்றும் கூறியுள்ளார். அதேசமயம் அந்த நேரத்தில் இந்த படத்தில் நடிப்பவர்களை தேர்வு செய்து கொடுத்து உதவி செய்து வந்த டாக்குமென்டரி பட இயக்குனரான ஜோஷி ஜோசப் என்பவர், இந்த படத்தில் ஸ்ரீலேகாவை நடிக்க வைக்க வேண்டும் என அழைத்தவரே இயக்குனர் ரஞ்சித் தான். அதன்பிறகு ஸ்ரீலேகா தனக்கு நேர்ந்த இந்த அனுபவத்தால் படத்தில் இருந்து வெளியேறியது இயக்குனர் ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சங்கர் ராமகிருஷ்ணன் என்பவர் மூலமாக தனக்கு தெரிய வந்தது என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இயக்குனர் ரஞ்சித் கேரள திரைப்பட அகாடமி சேர்மன் பதவியை விட்டு விலக வேண்டும் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது. அதே சமயம் இது குறித்து கேரள கலாசாரத்துறை அமைச்சர் ஷாஜி செரியனிடம் கேட்கப்பட்டபோது வெறும் வாய்மொழி குற்றச்சாட்டு மூலமாக பிரபலமான இயக்குனர் மீது அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்க முடியாது. எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் மட்டுமே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இப்படி அவர் கூறியதற்கும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.