ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
திரையலகில் ஒரே பெயர் கொண்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாவது எப்போதாவது நடக்கும் ஒரு ஆச்சரிய நிகழ்வு. கடந்த வருடம் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியானபோது மலையாளத்திலும் நடிகர் தியான் சீனிவாசன் நடிப்பில் இதே பெயரில் ஜெயிலர் கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒரு படம் உருவாகி, ஜெயிலர் வெளியான சில நாட்கள் கழித்து வெளியானது.
இந்தநிலையில் மலையாளத்தில் கடந்த வாரம் வாழ என்கிற படம் வெளியாகி உள்ள நிலையில் தற்போது தமிழிலும் அதேபோல தமிழிலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை என்கிற படம் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
மலையாளத்தில் வாழ திரைப்படம் வெளியாகி ஒரு வாரமே ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளரும், பிரபல இயக்குனருமான விபின் தாஸ். இவர்தான் ஹிட் படங்களான ஜெய ஜெய ஜெய ஜெய ஹே மற்றும் குருவாயூர் அம்பல நடையில் ஆகிய படங்களை இயக்கியவர்.
ஒரு தயாரிப்பாளராக மாறி சவின் என்கிற இயக்குனரை அறிமுகப்படுத்தி இவர் வாழ படத்தை தயாரித்திருந்தார். விடலை பருவத்தில் இருக்கும் இளைஞர்களுக்கும் அவர்களது பெற்றோருக்குமான புரிதல் குறித்து இந்தப்படம் உருவாக்கி இருந்தது. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை இதே இயக்குனர் மற்றும் நட்சத்திரங்களுடன் உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளார் விபின் தாஸ்.