அப்பா இசையில் முதல் தெலுங்குப் பாடல் பாடிய யுவன்ஷங்கர் ராஜா | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - செப்டம்பர் 18 வெளியீடு | தற்போதைய தமிழ் சினிமா இசை - அனுராக் காஷ்யப் கிண்டல் | ரூ.100 கோடி வசூலைக் கடந்த அஜய் தேவ்கனின் 'ரெய்டு 2' | பாதுகாப்பு வீரர்களின் தியாகம்: சமந்தா நெகிழ்ச்சி | 23வது ஆண்டில் தனுஷ்! - குபேரா படத்தின் கதாபாத்திரத்தின் பெயர் வெளியானது! | ‛ஜனநாயகன்' படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் விஜய்! லீக் அவுட் ஆன புகைப்படம்!! | பாடகி கெனிஷாவுடன் என்ட்ரி கொடுத்த ரவி மோகன்- ஆர்த்திக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராதிகா - குஷ்பூ! | கமலின் 237வது படத்தை இயக்கும் அன்பறிவ் பிறந்த நாள் - வீடியோ வெளியிட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்! | ரஜினி அடுத்த பட ரேசில் வினோத், அருண்குமார்! |
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தை தொடங்கியுள்ள நிலையில் கடந்த மாதம் விக்ரவாண்டியில் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். அதையடுத்து தற்போது வினோத் இயக்கும் தனது 69 வது படத்தில் நடித்து வரும் விஜய், விரைவில் தமிழகம் முழுக்க சூறாவளி பிரச்சாரம் செய்யவும் திட்டமிட்டு வருகிறார். இந்த நிலையில் விஜய் கட்சியை அறிவித்த பிறகு நடிகர்கள் சவுந்தர்ராஜா, தாடி பாலாஜி அவரது கட்சியில் இணைந்த நிலையில் தற்போது மாரி செல்வராஜ் இயக்கிய வாழை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த பொன்வேலும் தற்போது விஜய் கட்சியில் இணைந்திருக்கிறார். பொன்வேல் தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் முன்னிலையில் விஜய் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.