ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குப் படம் 'புஷ்பா 2'. இப்படம் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு டிசம்பர் 5ல் வெளியாகப் போகிறது.
உலக அளவில் மொத்தம் 12 ஆயிரம் தியேட்டர்களில் இப்படத்தை வெளியிட உள்ளதாகத் தகவல் வந்துள்ளது. அதில் ஐமேக்ஸ் தியேட்டர்களின் எண்ணிக்கை, இதுவரை வெளியான இந்தியப் படங்களின் ஐமேக்ஸ் தியேட்டர் எண்ணிக்கையை விடவும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள்.
'புஷ்பா 2' வெளியாக உள்ள நாளில் தமிழில் கூட வேறு படங்கள் போட்டிக்கு இல்லாத சூழல்தான் உள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 800 தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
சூர்யா நடித்து வெளிவந்த 'கங்குவா' படம் 11 ஆயிரம் தியேட்டர்களில் வெளியானதாகத் தகவல். அந்தப் படத்தை விடவும் 'புஷ்பா 2' கூடுதலாக 1000 தியேட்டர்களில் வௌயிகிறது.




