போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

கடந்த மாதம் 23ம் தேதி வெளியான படம் 'வாழை'. இப்படத்தை மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கி இருந்தார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கி வெளியிட்டது. இப்படத்தில் பொன்வேல், ராகுல் ஆகிய சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அவர்களுடன் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இது மாரி செல்வராஜின் சொந்த வாழ்க்கை கதையாக வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 11ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்பட 7 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருப்பதாக சமீபத்தில் மாரி செல்வராஜ் அறிவித்திருந்தார்.