இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
நடிகர் ஜெயம் ரவி தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது ஆர்த்தியை விவாகரத்து செய்ய இருக்கிறார். கோவாவை சேர்ந்த பாடகியுடன் இருக்கும் நெருக்கம் காரணமாகத்தான் ஜெயம்ரவி மனைவியை பிரிகிறார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் மனைவியின் டார்ச்சர் தாங்க முடியாமல்தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறியிருக்கிறார்.
தனியார் யு டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஜெயம்ரவி கூறியிருப்பதாவது: ஆர்த்தியுடன் திருமணமாகி 10 ஆண்டுகள் நன்றாக போனது. எங்களுக்குள் காதல் இருந்தது. அதன் பிறகுதான் பிரச்னைகள் ஆரம்பித்தது. எனக்கென்று தனியாக வங்கிக் கணக்கு கிடையாது. என் பெயரிலும் மனைவி பெயரிலும் சேர்த்து ஜாயின்ட் அக்கவுண்ட் 3 இருக்கிறது. இதில் நான் எவ்வளவு பணம் எடுத்தாலும் அதற்கான மெசேஜ் ஆர்த்திக்குதான் போகும். எனக்கு வராது. அதேபோல் ஆர்த்தி பணம் எடுத்தால் அந்த விவரமும் எனக்கு தெரிய வராது.
10 வருடங்களுக்கு பிறகுதான் இந்த விஷயங்கள் பெரிதானது. நான் வெளிநாட்டுக்கு படப்பிடிப்புக்கு சென்று பணத்தை எடுத்தால், எதற்காக பணம் எடுத்தாய்? என்ன செலவு செய்தாய்? அந்த பணத்தில் என்ன சாப்பிட்டாய்? என்றெல்லாம் ஆர்த்தி கேட்க ஆரம்பித்து விடுவார். அதே சமயம், அவர் லட்சங்களில் ஹேண்ட் பேக்குகள், அழகு சாதனப் பொருட்கள் வாங்கிக் குவிப்பார். அதை நான் கேட்க முடியாது. ஒரு கட்டத்துக்கு பிறகு எனது உதவியாளர்களுக்கு போன் செய்து, சார் இவ்வளவு பணம் எடுத்திருக்கிறார். இதற்கெல்லாம் செலவு செய்ததாக சொல்கிறார். அது நிஜமா என்றெல்லாம் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்.
இது தெரிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். என்னைப் பற்றி அவர் கேட்டால் அது கணவன், மனைவி பிரச்னையாக மட்டுமே முடிந்துவிடும். அதை விட்டு விட்டு எனது உதவியாளர்களிடம் கேட்டால், அவர்கள் என்னை எப்படி பார்ப்பார்கள்? ஒரு முறை பெரிய படம் ஒன்று நடித்தபோது, அந்த படக்குழுவுக்கு ட்ரீட் கொடுத்தேன். உடனே எனது உதவியாளர்களுக்கு போன் செய்து, 'எதற்கெல்லாம் எவ்வளவு செலவு செய்தார், யார் யார் வந்தார்கள்' என்றெல்லாம் ஆர்த்தி கேட்டிருக்கிறார். இது என்னை மனதளவில் பாதிக்க செய்தது.
வாட்ஸ்அப்பில் ஏதாவது மெசேஜ் வந்தால் இந்த மெசேஜ் ஏன் வந்தது? இந்த புகைப்படம் ஏன் உங்களுக்கு வந்தது என்றெல்லாம் கேட்பார். இதனால் 6 வருடம் நான் வாட்ஸ்அப்பே பயன்படுத்தாமல் இருந்தேன். 'பிரதர்' படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடக்கும்போது, ஒருமுறை வீடியோ கால் செய்து, 'உங்கள் ஓட்டல் அறையில் யார் இருக்கிறார்கள் காட்டுங்கள் என கேட்டார். இந்த சம்பவமும் எனக்கு பேரதிர்ச்சியை தந்தது. இது பெரிய பிரச்னையாகி படப்பிடிப்பிலிருந்து நான் பாதியில் வெளியேற வேண்டிய நிலை வந்தது. இதுபோல் நெருக்கடிகளால் நான் மனதளவில் காயம்பட்டேன்.
எனது அம்மாவுக்கு வருஷத்துக்கு ஒரு படம் நடித்து கொடுங்கள் என்றார். நானும் அடங்கமறு, பூமி, சைரன் படங்களில் நடித்துக் கொடுத்தேன். 3 படங்களும் நஷ்டம் என்றார்கள். ஆனால் நான் கணக்கு பார்த்தபோது 3 படத்திலும் லாபம் சம்பாதித்திருந்தார்கள். நான் சம்பாதித்து வாங்கிய வீடு எனது பெயரிலும் ஆர்த்தி பெயரிலும் இருக்கிறது. இது தவிர, ஆர்த்தி பெயரில் நகைகள், மேலும் பல சொத்துகள் இருக்கிறது. 6 காரில் 2 கார்தான் எனது பெயரில் இருக்கிறது.
ஆர்த்தி வீட்டில் ஒரு சிலருக்கு இருக்கும் மரியாதை கூட எனக்கு கிடைக்கவில்லை. வேலையாட்கள் முன்கூட கோபமாக பேசுவது, சண்டை போடுவது என இருந்தால் யார்தான் பொறுத்துக்கொள்வார்கள்? இதனால்தான் பிரியும் முடிவை எடுத்தேன். இவ்வாறு ஜெயம்ரவி கூறியுள்ளார்.