பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நேரடி தமிழ் படத்தில் நடித்ததில்லை. பலர் முயன்றும் அது நடக்கவில்லை. எஸ்.ஜே.சூர்யாவுடன் 'உயர்ந்த மனிதன்' என்ற படத்தில் நடித்தார் அந்த படம் டிராப் ஆகிவிட்டது. தற்போது முதன் முறையாக 'வேட்டையன்' படத்தில் ரஜினியுடன் நடிக்கிறார். ஹிந்தியில் 3 படங்களில் அமிதாப்புடன் நடித்த ரஜினி பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கிறார். இந்த படத்தில் அவர் மனித உரிமை ஆர்வலராக நடித்துள்ளார்.
இது எப்படி சாத்தியமானது என்பது குறித்து இயக்குனர் த.செ.ஞானவேல் கூறியிருப்பதாவது: வேட்டையன் படத்தின் கதையை எழுதியபோது இந்த கேரக்டரில் இவர்தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அவர்களை மனதில் வைத்தே கேரக்டரை எழுதினேன். அப்படி எழுதப்பட்டதுதான் அமிதாப் பச்சன் கேரக்டர். நான் அவரின் ரசிகன் அல்ல. அவரின் படங்களையும் பெரிதாக பார்த்தில்லை, மிகவும் பிரபலமான அவர் நடித்த பிளாக், சீணிகம், பிக்கூ படங்களை மட்டும் பார்த்தேன். மற்றபடி அவரை பற்றி எல்லோரையும்போல தகவல்களாக அறிந்து வைத்திருந்தேன்.
ரஜினியிடம் அமிதாப்பை நடிக்க கேட்கலாமா என்றேன். அதற்கு அவர் “இதற்கு முன்பே சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோது நாங்களே மறுத்து விட்டோம். இப்போது மட்டும் ஒத்துக் கொள்வாரா என்ன? கேட்டுப் பாருங்கள்” என்றார். முதலில் அவரை சந்தித்து கதை சொன்னபோது அவருக்கு கதை பிடித்திருந்தது. அடுத்த சந்திப்பில் நடிக்க ஒப்புக் கொண்டார். கதை பிடித்திருந்தாலும், ரஜினியுடன் நடிக்க விரும்பியதாலும் நடிக்க ஒப்புக் கொண்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.