விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி | வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் | கருப்பு : பிரமோஷனை ஆரம்பித்த த்ரிஷா | இரண்டு வாரங்களில் 'ஜனநாயகன்' ரிலீஸ் : தயாரிப்பாளர் சொன்ன தகவல் | 'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் |

63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கை 'கண்ணப்பா' என்ற பெயரில் தெலுங்கில் தயாராகிறது. சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தை தெலுங்கு நடிகர் மோகன்பாவும், அவரது மகள் லட்சுமி மஞ்சுவும் இணைந்து தயாரிக்கிறார்கள். மகன் விஷ்ணு மஞ்சு கண்ணப்பராக நடிக்கிறார். இவருடன் சரத்குமார், மோகன்பாபு, மது, முகேஷ் ரிஷி, பரம்மானந்தம், பிரீத்தி முகுந்தன் உள்பட பலர் நடிக்கிறார்கள். மோகன்லால், பிரபாஸ், அக்ஷய்குமார், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல பான் இந்தியா நட்சத்திரங்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் தமிழ் நடிகையான ஐஸ்வர்யா முக்கிய கேரக்ட்ரில் நடிக்கிறார். பழம்பெரும் நடிகையான லட்சுமியின் மகளான ஐஸ்வர்யா தென்னிந்திய மொழிகளில் 60க்கும் மேற்பட்ட பங்களில் நடித்துள்ளார், தமிழில் நாயகியாகவும், குணிசித்ர வேடங்களிலும 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமா வாய்ப்பு குறைந்ததும் ஏராளமான டி.வி.தொடர்களில் நடித்தார். சினிமாவிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். கடந்த ஆண்டு டாடா, யானை படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் 'கண்ணப்பா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் காட்டில் வாழும் மாரியம்மா என்ற சூனியக்காரியாக நடித்திருக்கிறார். அவரது தோற்றத்தை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.