இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
தமிழ் சினிமா 30, 40 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலை வேறு, இப்போது இருக்கும் நிலை வேறு. தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்திருந்தாலும், மனதளவில், சிலர் வளர்ச்சி பெறவில்லை என்றே சொல்லலாம். முன்பெல்லாம் திரைப்பிரபலங்கள் வாழ்க்கை பற்றி கிசு கிசுக்கள் வரும், ஆனால் விவாகரத்து வரை, குடும்பத்தை, குழந்தைகளை பிரியும் நிலை அதிகம் வந்தது இல்லை. ஆனால் தற்போது திரைஉலகில் பல பிரபலங்களின் வாழ்க்கையில் பிரச்னைகள் ஏற்பட்டு விவாகரத்து வரை சென்று வருவதை அதிகம் பார்க்க முடிகிறது.
இன்றைக்கு யார் வீட்டில் தான் பிரச்னை இல்லை. பொது மக்கள் குடும்பங்களிலும் பல பிரச்னைகள் ஏற்பட்டு விவாகரத்து வரை போகிறது. ஆனால் திரைபிரபலங்கள் குடும்பத்தில் நடந்தால் மட்டும் அது பொதுவெளியில் பெரிய பேசு பொருளாகிறது. இதனால் திரைப்பிரபலங்கள் பொருளாதார ரீதியாகவும், மன அமைதியின்றியும் தவிக்கின்றனர். எளிதில் பேசி தீர்க்கும் விசயம் கூட விவாகரத்து வரை செல்வது வருத்தம் தருகிறது. நடிகர்களை உச்ச நட்சத்திரமாக மனதில் வைத்து ரசிகர்கள் அழகு பார்க்கின்றனர். அவர்களை பற்றி எதிர்மறை விமர்சனம் வந்தால் ரசிகர்களால் முதலில் தாங்க முடிவதில்லை.
கண்ணாடி பிம்பங்களை போல பல வருட காதலும், குடும்பமும் உடைந்து போகிறது. இதனால் கணவனோ, மனைவியோ செய்வதறியாது நிற்கும் நிலை ஏற்படுகிறது. சில விசயங்களால், வார்த்தைகளால், வசீகர அழகை நம்பி உண்மையான காதலும் பொய்யாகி குடும்பம், குழந்தை விட்டு விலகி தனித்து நிற்கும் நிலை ஏற்படுகிறது.
ரஜினி, கமல் என்று உச்ச நட்சத்திர வீடுகளிலும் பிரச்னை, பிரிவுகள், பிளவுகள் உள்ளன. கூடா நட்பு கேடில் முடியும் என்பது போல எல்லாவற்றுக்கும் பார்ட்டி, பந்தா, கேமரா வெளிச்சம், பெயர், புகழ், வெற்றி எல்லாம் தலைகால் புரியாமல் செய்யும் அந்த பிழைகள் கூட அவசியமற்ற பிரிவை பிரச்னையை குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் ஜெயம் ரவிக்கு ஏற்பட்ட இந்த பிரச்னைக்கு நடிகர் ஜீவா பெயரும் அடிபட்டது. காரணம் அவர் மூலம் தான் இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற ரவிக்கு பாடகி கெனிஷாவின் அறிமுகம் கிடைத்தது. ஒரு புதிய நபரின் அறிமுகம் ஒரு குடும்பத்தையே பாழ் ஆக்கிவிட்டது.
தனுஷ் - ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஆகியோரை தொடர்ந்து ஜெயம் ரவி - ஆர்த்தி பிரிந்துள்ளனர். இவர்களின் பிரிவை வைத்து பல யு-டியூப் தளங்களில் காது, மூக்கு வைத்து பேசி பேசி காசு பார்க்கின்றனர். ஆனால் அவர்களின் குழந்தைகள் எதிர்காலம் என்னவாகும், அவர்களை இந்த சமூகம் பார்க்கும் பார்வை எப்படி இருக்கும், பள்ளி குழந்தைகளோடு அவர்கள் எப்படி இயல்பாக பழகுவார்கள், அவர்கள் மன நிலை எப்படி எல்லாம் துடிக்கும், யாரிடம் அந்த குழந்தைகள் மனம் விட்டு பேசுவார்கள் என்று சிறிதும் யோசிப்பதும் இல்லை.
நடிகர் தனுஷ் தற்போது உள்ளூர், வெளியூர் எங்கு சென்றாலும் தனது மகன்கள் யாத்ரா, லிங்காவை தன்னுடனே அழைத்து செல்கிறார். ஜிவி பிரகாஷ் மகள் சிறு குழந்தை என்பதால் சைந்தவி வளர்த்து வருகிறார். ஜெயம் ரவி தனது மகன்கள் ஆரவ், அயன் ஆகியோரை தன்னோடு இருக்க ஆசைப்படுகிறார். ஆனால் அவரை நம்பி அனுப்ப ஆர்த்தி தயங்குகிறார். தன் மகனின் எந்த ஒரு படத்தின் இசை வெளியீடு என்றாலும் முதல் ஆளாக வந்து நிற்பவர் ரவியின் அப்பா எடிட்டர் மோகன். ஆனால் மகன் திருமண பிரிவு பிரச்னையால் பிரதர் பட இசை வெளியீடு பக்கமே அவர் வரவில்லை. மகனை எண்ணி வயதான தாயும், தந்தையும் நொறுங்கி போய் வீட்டிலேயே உள்ளனர்.
அதேசமயம் நிச்சயதார்த்தம் வரை சென்று நின்று போன திரிஷா திருமணம், திருமணம் முடிந்து விவாகரத்து பெற்ற சமந்தா போன்ற நடிகைகள் மீண்டும் எழுந்து படங்களில் நடித்து பிசியாகி வருவது அவர்கள் மன தைரியம் என்றே சொல்ல வேண்டும்.
கணவன் - மனைவி நான்கு சுவருக்குள் பேசி தீர்க்க வேண்டிய விசயத்தை ஆள் ஆளுக்கு பேசி, பேசி அதை பெரிதாக்கி, வலைதளங்கள் வரை கொட்டி தீர்க்கின்றனர். அவசர முடிவும், ஈகோ பிரச்னையும் தலை விரித்து ஆடும் நிலையில், குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை மனதில் வைத்து, ஆணோ பெண்ணோ தங்கள் குடும்ப பொறுப்புகளை பார்க்க வேண்டும். வீட்டில் உள்ளவர்களின் மன நிலையை புரிந்து கொண்டு எந்த ஒரு பிரச்னையையும் வீட்டிலேயே பேசி தீர்க்க வேண்டும் என்பதே அநேக நபர்களின் கருத்தாக உள்ளது. அதேசமயம் பொதுவெளியில் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது.
திரை உலகை பொறுத்தவரை நடிப்பு என்பதும் ஒரு வேலையே. தங்கள் வேலையை மட்டும் பார்த்துவிட்டு, வீடு வந்த பிறகு கணவன், மனைவி, தாய், தந்தை, குழந்தைகள் இவர்களோடு நேரம் செலவிட்டு தங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற பிரச்னையை இழுத்து கொண்டு வராமல் விட்டு விட்டால் திரை உலகம் அழகாகும். திரை நட்சத்திரங்கள் வாழ்வும் ஜொலிக்கும்.
குறிப்பு : திரைநட்சத்திரங்களை தங்களின் ஆதர்சன நாயகன், நாயகியாக ரசிகர்கள் பார்க்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கணும் என்கிற பொறுப்பும் கடமையும் பிரபலங்களுக்கு இருக்கு. ஆனால் அவர்கள் தடம் மாறும்போது ரசிகர்கள் உங்களை பார்க்கும் விதம் எப்படி இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சினிமாவில் மட்டும் ஏக வசனம் பேசி தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ளும் நடிகர்கள் நிஜத்திலும் அதை கடைப்பிடிப்பதே சாலச்சிறந்ததாக இருக்கும்.