கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி |
நடிகர் மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பிரம்மயுகம் என்கிற படம் வெளியானது. ராகுல் சதாசிவன் என்பவர் இயக்கிய இந்த படத்தை நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனம் தயாரித்திருந்தது. 17ம் நூற்றாண்டில் நடைபெறும் கதையாக மாந்திரீக பின்னணி கொண்ட கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருந்தது. மேலும் மம்முட்டி இந்த படத்தில் 80 வயதான பழமையான தோற்றத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் பிரம்மயுகம் படத்தின் டைட்டில், லோகோ, இசை, வீடியோ காட்சிகள் உள்ளிட்டவற்றை வணிக ரீதியாக பயன்படுத்துவதற்கு தடைவிதித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதே சமயம் சோசியல் மீடியாக்களில், வலைதளங்களில் இந்தப் படம் சம்பந்தப்பட்டவற்றை பயன்படுத்தி புதிதாக ஏதேனும் சொந்த படைப்புகளை உருவாக்க விரும்புபவர்கள் தங்களிடமிருந்து முறையான அனுமதியை பெற்று அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அனுமதியின்றி பயன்படுத்துபவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் இது குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.