சவாலான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் : சமந்தா | மொத்தமாக ஆக்கிரமிக்கப் போகும் 'விடாமுயற்சி' | மீண்டும் தீபாவளிக்கு திரைக்கு வரும் சிவகார்த்திகேயன் படம்! | ராம்சரண் 16வது படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் வெளியேறினாரா? | பூஜா ஹெக்டேவின் நெருக்கமான காட்சிக்கு கத்தரி போட்ட சென்சார் போர்டு! | 'தி இந்தியா ஸ்டோரி' படப்பிடிப்பு துவங்கியது : சொல்லப்படாத கதை என்கிறார் காஜல் | ஹிந்தி ராமாயணா படத்தில் இணைந்த ஷோபனா! | ரஜினியை இயக்க வந்த வாய்ப்பு குறித்து பிரித்விராஜ் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை வெள்ளித்திரையில் ராஜகுமாரனாக்கிய “ராஜகுமாரி” | அக்ஷய்குமாரை மீட்டெடுக்கும் 'ஸ்கை போர்ஸ்' |
தற்போது துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது நடித்த படங்களில் ஒன்று 'ஏஞ்சல்'. இந்த படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்த நிலையில் தயாரிப்பாளருக்கு இருந்த பொருளாதார சிக்கலால் படம் நின்று போனது. பின்னர் உதயநிதி ஸ்டாலின் அரசிலுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் படத்தை தயாரித்த ஓ.எஸ்.டி.பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராம சரவணன் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் உதயநிதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்த 'ஏஞ்சல்' திரைப்படத்தை தயாரித்தேன். இந்த படத்தை கே.எஸ்.அதியமான் இயக்கினார், கடந்த 2018ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது. இன்னும் 20 சதவீதம் படப்பிடிப்பு பாக்கி உள்ளது.
இந்தநிலையில் 'மாமன்னன்' படம்தான் தனக்கு கடைசி படம் என்றும் நடிப்பில் இருந்து விலகுவதாகவும் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். ஏஞ்சல் படத்துக்கு இதுவரை 13 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளேன். என்னுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இன்னும் 8 நாட்கள் கால்ஷீட் தந்து நடித்து கொடுக்க உதயநிதி ஸ்டாலினுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்க கோரி உதயநிதி ஸ்டாலின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த இழப்பீடு கேட்டு மனுதாரர் 5 ஆண்டுகள் காலதாமதமாக தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் “ஏஞ்சல் படத்தின் தயாரிப்பாளர் சட்டவிதிகளின் படி 3 ஆண்டுகளுக்குள் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். அந்த கால அளவை கடந்திருப்பதால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என்று தீர்ப்பளித்தது.