இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
மலையாள திரையுலகின் சீனியர் இயக்குனரும் கேரள திரைப்பட அகாடமியின் சேர்மேனுமான இயக்குனர் ரஞ்சித், பெங்காலி நடிகையான ஸ்ரீலேகா மித்ரா என்பவர் கூறிய பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி தனது சேர்மன் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவர் மீது போலீசார் வழக்கும் பதிந்துள்ளனர். இந்த நிலையில் வளர்ந்து வரும் நடிகர் ஒருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் ரஞ்சித் தன்னிடம் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டார் என காவல்துறையில் புகார் அளித்து இன்னொரு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அந்த புகாரில், ‛இயக்குனர் ரஞ்சித் படத்தில் நடிப்பதற்காக நான் ஆடிஷனுக்காக அவரை சந்திக்க ஹோட்டலுக்கு சென்றபோது அவர் தன்னுடைய அறையில் என்னை ஆடைகளை களையச் செய்து நிர்வாணமாக புகைப்படங்கள் எடுத்தார். நான் அதை ஆடிஷன் என்று தான் நினைத்தேன். ஆனால் அந்த புகைப்படங்களை அப்போதே நடிகை ரேவதிக்கு அனுப்பி வைத்தார். பின்னர் அந்த புகைப்படங்கள் எல்லாம் நடிகை ரேவதிக்கும் பிடித்திருப்பதாக என்னிடம் கூறிய அவர், மறுநாள் எனக்கு ஒரு சிறிய தொகையையும் கொடுத்து அனுப்பினார். அந்த மன உளைச்சலில் இருந்த நான் தற்போது ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை தொடர்ந்து இத்தனை வருடங்களுக்கு பிறகு இயக்குனர் ரஞ்சித் மீது புகார் அளித்துள்ளேன்' என்று கூறியிருந்தார்.
அவரது இந்த புகாரில் நடிகை ரேவதி பற்றியும் குறிப்பிட்டு இருந்தது இன்னொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடிகை ரேவதியிடம் இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “என்னையும் இயக்குனர் ரஞ்சித்தையும் சம்பந்தப்படுத்தி மீடியாக்களில் வெளியான அந்த செய்தியை நானும் பார்த்தேன். அந்த குற்றச்சாட்டில் சொல்லப்பட்டிருப்பது போல எந்த புகைப்படங்களும் எனக்கு அனுப்பப்படவில்லை. அதனால் அது குறித்து கமெண்ட் செய்வது தேவையில்லாத ஒன்று என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.