ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி | ஆஸ்கர் மியூசியத்தில் திரையிடப்படும் 'பிரம்மயுகம்' | மிடில் கிளாஸ் படம் எதை பேசுகிறது | கும்கி 2 பட ஹீரோ மதி யார் தெரியுமா? : லிங்குசாமி சொன்ன குட்டி லவ் ஸ்டோரி | காதலருடன் கட்டியணைத்து போஸ் கொடுத்த சமந்தா | 50 கோடி கிளப்பில் இணைந்த ‛டயஸ் இரே' : ஹாட்ரிக் அடித்த பிரணவ் மோகன்லால் | கிறிஸ்துமஸ் ரிலீஸ் ஆக தள்ளிப்போன விருஷபா | பான் இந்தியா படமாக வெளியாகும் ஹனி ரோஸின் ரேச்சல் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | சச்சினை இயக்கிய ஓஜி பட இயக்குனர் |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் புதிய படங்கள் வெளியாகும் போது நள்ளிரவு காட்சிகள், அதிகாலை காட்சிகள் ஆகியவற்றிற்கு தமிழக அரசின் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2023ம் வருடம் பொங்கலை முன்னிட்டு அஜித் நடித்து வெளிவந்த 'துணிவு' படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சியின் போது சென்னையில் படம் பார்க்க வந்த 19 வயது இளைஞர் ஒருவர் லாரி மீதிருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். அதன் பிறகு அதிகாலை காட்சிகள், காலை 7 மணி, 8 மணி காட்சிகள் ஆகியவற்றிற்கு அனுமதி கொடுப்பதை தமிழக அரசு நிறுத்திவிட்டது. காலை 9 மணி முதல் தான் சிறப்புக் காட்சிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் விஜய் நடித்து இந்த வாரம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ள 'தி கோட்' படத்திற்கு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி கிடைக்குமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இருந்தாலும் கோயம்பத்தூரில் உள்ள ஒரு மல்டிபிளக்ஸ் தியேட்டரில் காலை 7 மணிக்கும், 7.40 மணிக்கும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 11ம் தேதி வரையிலும் அந்த காட்சிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. வேறு எந்த இடத்திலும் இப்படியான முன்பதிவு நடைபெறவில்லை. அப்படியிருக்க அந்த குறிப்பிட்ட தியேட்டரில் மட்டும் எந்தவிதமான அரசு அனுமதி பெற்று இப்படி முன்பதிவு செய்து வருகிறார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.