பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் |
நடிகர் திலகம் சிவாஜியின் 97வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக அவரது ரசிகர் மன்றத்தினர் ஏராளமான ஏற்பாடுகளை செய்துள்ளனர். அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு, துஷ்யந்த் உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
சிவாஜி பிறந்தநாளை முன்னிட்டு கமல் வெளியிட்டுள்ள பதிவில், “காலங்கள் மாறலாம், தொழில் நுட்பங்கள் கூடலாம், சினிமாவின் முகமே மாற்றத்துக்கு இலக்காகியிருக்கலாம். ஆனால், நடிப்புக் கலையின் உச்சம் என்பது எப்படி இருக்கும் என்று காட்டிய மாபெரும் கலைஞன் சிவாஜி சாரின் பங்களிப்பு மறக்கவொண்ணாதது. பிரமிக்க வைக்கும் சாதனைகளைச் செய்து காட்டிய வரை பிறந்தநாளில் வணங்குகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.