நான் ஏன் பிறந்தேன், தம்பிக்கு எந்த ஊரு, துணிவு - ஞாயிறு திரைப்படங்கள் | 'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் |
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தற்போது 'டீன்ஸ்' என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்துள்ளார். இந்த படத்தில் பார்த்திபன் தவிர குழந்தை நட்சத்திரங்களான பிரஷிதா நசீர், எல்ஏ ரிஷே ரத்னவேல், பிராங்கின்ஸ்டீன், தீபேஷ்வரன் ஜிஎஸ், அஸ்மிதா மகாதேவன், கேஎஸ் தீபன், உதய்பிரியன் கே, விஷ்ருதா ஷிவ், டி ஜான் போஸ்கோ, சில்வென்ஸ்டன், டி.அம்ருதா மற்றும் கிருத்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யோகிபாபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
பார்த்திபனுடன் கால்டுவெல் வேல்நம்பி, டாக்டர் பாலா சுவாமிநாதன், டாக்டர் பிஞ்சி ஸ்ரீனிவாசன் மற்றும் ரஞ்சித் தண்டபாணி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார், கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படம் நாளை வெளிவருகிறது. இந்த படத்திற்கு திரையரங்க கட்டணமாக 100 ரூபாய் நிர்ணயித்துள்ளார் பார்த்திபன். “இது என் படத்திற்கு நானே விதித்துக் கொண்ட வரிவிலக்கு. இதனால் நட்டம் என்பதல்ல நல்ல படத்தை எல்லோருக்கும் பார்க்க வேண்டும் என்கிற நாட்டமே” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், ‛‛100 ரூ +ஜிஎஸ்டி etc விலையில் டிக்கெட் என் விருப்பம். விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் சம்மதித்தப் பின்னே இம்முடிவு. இருப்பினும் சில இடங்களில் முன் பின் இருக்கும். பொறுத்தருள்க! ரிசர்வ்வேஷன் துவங்கிவிட்டது. இன்று Thursday ஆகிவிட்டது, நாளை TEENZ day ஆக்குங்கள்'' என குறிப்பிட்டுள்ளார் பார்த்திபன்.