நானும் கட்சி தொடங்குவேன் : பார்த்திபன் சொல்கிறார் | பிரபஞ்சத்துக்கே நான்தான் சூப்பர் ஸ்டார்: மிர்ச்சி சிவா கலகல | பிளாஷ்பேக்: ஜெயனுக்கு பதில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: காணாமல் போன வெற்றிப்பட நாயகன், நாயகி | 'விடுதலை 2' டிரைலர் வசனம்: விஜய்யை குறி வைக்கிறதா? | சூர்யா 45 படப்பிடிப்பு பொள்ளாச்சியில் இன்று ஆரம்பம் | 30 மில்லியனைக் கடந்த கீர்த்தி சுரேஷின் கிளாமர் நடனம் | 9 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்? கமென்ட் 'ஆப்' செய்த அகில் | 5 வருடப் பயணம்: அல்லு அர்ஜுன் நெகிழ்ச்சி | 257 நாட்கள் நடந்த 'விடுதலை 1, 2' படப்பிடிப்பு |
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் நேற்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சட்டசபை வளாத்தில் உள்ள முதல் அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது : உலகில் மிக அழகான கடற்கரை நகரங்களில் புதுச்சேரியும் ஒன்று. சினிமா படப்பிடிப்பு கட்டணம் குறைக்கப்பட்டால், புதுச்சேரியில் சுற்றுலா மேம்படும். நிறைய படப்பிடிப்பு நடைபெறும்.
இந்த ஆண்டு விவாகரத்து ஆண்டு போல. அதனால்தான் திரைத்துறையில் நிறைய விவாகரத்து செய்திகள் வந்துள்ளது. இசையமைப்பாளர் ரஹ்மானுடன் கிட்டத்தட்ட 22 ஆண்டுகளாக பழகியுள்ளேன். அவர் மிகவும் தூய்மையானவர். அவரை போல ஒரு சிறந்த மனிதர் உலகிலேயே கிடைக்க மாட்டார். அதனால்தான் விவாகரத்து அறிவித்த அவரது மனைவியே அவரைப் பற்றி யாரும் தவறாக பேச வேண்டாம் என கூறியுள்ளார். அவர்கள் விவாகரத்து விஷயத்தில் நாம் தலையிட்டு இருக்கக் கூடாது. அவசரப்பட்டு கருத்து கூறிவிட்டோமோ என தோன்றுகிறது.
விஜய்யின் அரசியலை தவிர்க்க முடியாத ஒரு அரசியலாக பார்க்கிறேன். ரஜினி, கமல் அரசியலுக்கு வரும்போது கூட இவர்கள் வந்து என்ன செய்து விடுவார்கள் என விமர்சனங்கள் இருந்தது. அதுபோல விமர்சனங்கள்தான் தற்போது விஜய்க்கும் உள்ளது. ஆனால் அவருடைய எழுச்சி என்பது மிகவும் பிரமாதமாக உள்ளது. எனக்கும் அரசியலில் பயங்கர ஈடுபாடு உள்ளது. நானும் ஒரு நாள் கட்சி ஆரம்பிப்பேன், என் அரசியல் யாரையும் சார்ந்து இருக்காது. புதிய பாதை தொடங்கி என்னுடைய அனைத்து படங்களிலும் அரசியல் உள்ளது. எனக்கும் அரசியல் விருப்பம் உள்ளது, ஆனால் அது இப்போதைக்கு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.