காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! | பின்னணி குரல் கொடுத்த கார்த்திக்கு நன்றி தெரிவித்த '3பிஹெச்கே' இயக்குனர் | 'டைட்டானிக்' ரிலீஸ் : தயாரிப்பாளருக்கு கோரிக்கை வைக்கும் கலையரசன் | 2025ன் அரையாண்டில் தமிழ் சினிமா வசூல் எவ்வளவு? |
சந்தான பாரதி இயக்கத்தில் 1991ம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த படம் 'குணா'. சுவாதி சித்ரா இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் உலகம் முழுவதும் வெளியிட்டது. கமல்ஹாசன், ரோஷினி, ரேகா, ஜனகராஜ், அஜய் ரத்தினம், எஸ்.வரலட்சுமி, கிரீஷ் கர்னாட், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சரத் சக்சேனா, காகா ராதாகிருஷ்ணன், பிரதீப் சக்தி, அனந்து ஆகியோர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்திருந்தார்.
33 வருடங்கள் கடந்த நிலையில் மலையாள படமான 'மஞ்சுமல் பாய்ஸ்' குணாவை மீண்டும் நினைவூட்டியது. கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமின்றி தலைமுறை கடந்து இன்றைய இளம் தலைமுறை குணா படத்தையும், அதில் இடம்பெற்றுள்ள வசனங்களையும், பாடல்களையும் நினைவூட்டி கொண்டாடி வருகின்றனர்.
இந்த படம் டிஜிட்டல் வடிவத்தில், மெருகூட்டப்பட்டு கடந்த ஜூன் 21ம் தேதி உலகம் முழுவதும் மறுவெளியீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப பணிகள் முடிவடையாததால் வெளியாகவில்லை.
இந்த நிலையில் இந்த படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர், 'குணா' படத்தை மறு வெளியீடு செய்ய பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கும் நிரந்தர தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'குணா' படத்தை மறுவெளியீடு செய்ய இடைக்கால தடை விதித்தது. மேலும், இந்த மனுவுக்கு ஜூலை 22ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.