சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? |
நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி, சமீபத்தில் இந்து என்பவரை எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து அவரது மனைவியான இந்து தாங்கள் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது பிரேம்ஜி வீடு துடைப்பது, துவைத்த துணிகளை காய போடுவது போன்ற காட்சிகள் மட்டுமின்றி அவர் சிங்கிளாக இருந்த போது எப்படி எல்லாம் ஜாலியாக இருந்தார் என்பது குறித்த வீடியோ காட்சிகளையும் வெளியிட்டு வருகிறார்.
இந்த வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதைப்பார்த்து நெட்டிசன்கள், ‛பிரேம்ஜிக்கா இந்த நிலைமை. என்னடா இது தலைவருக்கு வந்த சோதனை. சிங்கத்தை இப்படி உட்கார வைச்சிட்டாங்களே' போன்ற பல்வேறு பலதரப்பட்ட கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள்.