ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கும், கார்த்திக் என்பவருக்கும் கடந்த மாதத்தில் திருமணம் நடைபெற்றது. அதையடுத்து சில டிவி நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்று வரும் அவர்கள், சில தினங்களுக்கு முன்பு நடிகையும் பிக்பாஸ் சீசன்-1 நிகழ்ச்சியின் போட்டியாளருமான சுஜா வாருணி மற்றும் அவரது கணவரான நடிகர் சிவாஜிதேவின் வீட்டுக்கு விருந்துக்கு சென்றுள்ளார்கள். அப்போது தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் நடிகை இந்திரஜா.
அதோடு, நேற்று சிவா அண்ணா, சுஜி அக்கா வீட்டிற்கு சென்றிருந்தோம். அவர்கள் கொடுத்த டின்னர் சூப்பராக இருந்தது. இதற்கெல்லாம் மேலாக, அவர்கள் காட்டிய அன்பு பாசமும் மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. எனக்கு ஒரு நல்ல அண்ணனும், அக்காளும் கிடைத்து விட்டார்கள். அன்றைய நாள் ரொம்ப அழகாகவும் மகிழ்ச்சியாகவும் சென்றது. நாங்கள் எங்களுக்கான மனிதர்களை சம்பாதித்து விட்டோம் என்று பதிவு செய்திருக்கிறார் இந்திரஜா.




