விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' |
திரையுலகில் ஆண்கள் 70 வயதைக் கடந்தாலும் கதாநாயகர்களாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் மகள் வயது, 20 பிளஸ் கதாநாயகிகளுடன் ஜோடி சேர்ந்து ஆடிப் பாடுகிறார்கள். ஆனால், நடிகையருக்கு வயதானாலோ, திருமணமானாலோ அவர்களுக்கு வாய்ப்புத் தர மறுப்பது சில பல வருடங்களுக்கு முன்பு வரை இருந்தது.
ஆனால், சமீப காலமாக அந்த நிலை மாறிவிட்டது. திருமணமானாலும், குழந்தை பெற்றாலும், வயது அதிகரித்து வந்தாலும் நடிகையரும் கதாநாயகியாகவே தொடர்ந்து நடித்து வருகிறார்கள். அப்படியான தமிழ் நடிகைகளில் கடந்த 22 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. இன்று அவருக்கு 42 வயது நிறைவடைந்து 43வது வயது ஆரம்பமாகிறது. வயதுக்கான தகவல் உபயம் விக்கிபீடியா, அதனால் த்ரிஷா ரசிகர்கள் கோபித்துக் கொள்ள வேண்டாம்.
தமிழ், தெலுங்கு, ஒரே முறை ஹிந்தி, எப்போதாவது மலையாளம் என தொடர்ந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார். தமிழில் 'தக் லைப், சூர்யா 45', தெலுங்கில் 'விஷ்வம்பரா', மலையாளத்தில் 'ராம்' என மூன்று மொழிகளிலும் பிஸியாக இருக்கிறார்.
போட்டி நிறைந்த, ஆணாதிக்கம் நிறைந்த சினிமா உலகில் இத்தனை வருடங்கள் தாக்குப் பிடித்து நிற்பதே தனி சாதனைதான். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா…
த்ரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழில் அவர் நடித்து 'தக் லைப்' படக்குழு, சிறப்பு போஸ்டரை வெளியிட்டு த்ரிஷாவை வாழ்த்தி உள்ளது. அதேபோல் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடித்துள்ள 'விஷ்வம்பரா' குழுவினர் த்ரிஷாவின் 'அவனி' என்ற கதாபாத்திர அறிமுகத்துடன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள். இதில் தக்லைப் ஜூன் 5ம் தேதியும், விஷ்வம்பரா அக்டோபர் 30ம் தேதியும் ரிலீசாகிறது.