தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் ஏப்ரல் 10ம் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'. இப்படம் தற்போது 25வது நாளைத் தொட்டுள்ளது.
தமிழகத்தில் முதல் நாளில் 30.9 கோடி வசூல், 5 நாளில் 100 கோடி வசூல், இரண்டாவது வார முடிவில் தமிழகத்தில் 172.3 கோடி வசூல் ஆகியவற்றோடு தற்போது 25 நாள் 'சம்பவம்' என படத்தின் தமிழக வினியோகஸ்தர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வீடியோ ஒன்றை வெளியிட்டு அஜித் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி உள்ளார்.
உலக அளவில் இந்தப் படம் 250 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மே 1ம் தேதி வெளியான புதிய படங்களால் இப்படத்திற்கான தியேட்டர்கள் குறைந்துள்ளது. மேலும், மே 8ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. விடுமுறை நாட்கள் என்பதால் இன்னும் சில நாட்கள் தியேட்டர்களில் ஓடலாம். அஜித்தின் படங்களில் அதிக வசூலித்து நம்பர் 1 படமாக சாதனை புரிந்துள்ளது.