2 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள மிடில் கிளாஸ் | அஜித் 64 படத்தை குறித்து புதிய தகவல் இதோ | மகுடம் பட பிரச்சனையை சுமூகமாக தீர்த்த விஷால் | சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி | மினி இட்லியாக சுவைக்கப்படணும் : பார்த்திபன் ஆசை | கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வரும் குஷி ரவி | ஹீரோவான ‛பிக் பாஸ்' விக்ரமன் | ‛பறந்து போ' கிரேஸ் ஆண்டனிக்கு திருமணம் : 9 வருட காதலரை மணந்தார் | பிளாஷ்பேக் : 33 முறை மோதிய விஜயகாந்த், பிரபு படங்கள் | பிளாஷ்பேக்: முத்துராமலிங்கத் தேவர் பார்த்த ஒரே படம் |
தமிழ் சினிமாவில் சமீப காலங்களில் பழைய திரைப்படப் பாடல்களை தங்களது படங்களில் சில இயக்குனர்களில் பயன்படுத்தி புதிய டிரென்ட் ஒன்றை உருவாக்கினார்கள். அவை படத்திற்கு பக்கபலமாகவும் அமைந்ததால் பலரும் அதைத் தொடர்ந்தார்கள்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில், அஜித், த்ரிஷா நடித்து வெளிவந்த 'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜாவின் இசையில் வந்த 'இளமை இதோ இதோ, ஒத்த ரூபாய் தாரேன், எஞ்சோடி மஞ்சக்குருவி' ஆகிய பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.
தன்னிடம் முறையான அனுமதி பெறாமல் இப்பாடல்களைப் பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த மூன்று பாடல்களையும் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்தது.
இதனிடையே, ஓடிடி தளத்தில் இடம் பெற்றுள்ள 'குட் பேட் அக்லி' படத்தில் இன்னும் அந்தப் பாடல்கள் நீக்கப்படவில்லை, அப்படியே இருக்கின்றன. அந்தப் பாடல்கள்தான் படத்தின் சிறப்பம்சமாக இருந்தது. தற்போது அந்தப் பாடல்கள் இல்லையென்றால் படத்தைப் பார்க்க முடியுமா என்ற சந்தேகமும் உள்ளது.