சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி |
லொள்ளு சபா புகழ் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்து, காமெடி கலந்த பேய் படமாக வெளிவந்த தில்லுக்கு துட்டு படம் இரண்டு பாகங்களாக வெளியானது. கடந்த ஆண்டில் தில்லுக்கு துட்டு மூன்றாம் பாகம் 'டிடி ரிட்டர்ன்ஸ்' என பெயரில் வெளியானது. இந்த படத்தை ராம்பாலாவின் உதவி இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கினார்.
ஏற்கனவே டிடி ரிட்டன்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது என அறிவித்தனர். சந்தானம் நடிக்கும் இப்படத்தை ஆர்யா தயாரிக்கிறார். இதில் கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் இப்போது விஜய்க்கு ஜோடியாக தி கோட் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.