இப்படி செய்தால் வாய்ப்பு கிடைக்குமா? : சிவாங்கி நெத்தியடி பதில் | கார் தவணை கூட கட்டமுடியாத கஷ்டம்! ஆனால் இப்போது? | ஜி.வி. பிரகாஷ்க்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்த 25வது படம் 'கிங்ஸ்டன்' | திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம்: நடிகை ரூபினியிடம் ஒன்றரை லட்சம் மோசடி! | கூலி படப்பிடிப்பில் 39வது பிறந்தநாளை கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்! | 55வது படத்தில் பயோபிக் கதையில் நடிக்கும் தனுஷ்! | பிரதீப் ரங்கநாதன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியன்கர்! | அஜித்தின் 'குட் பேட் அக்லி', சூர்யாவின் 'ரெட்ரோ' இரண்டு படங்களும் ஒரே மாதிரி கதையா? | வெங்கட் பிரபுவிடம் அவகாசம் கேட்ட அக்ஷய் குமார் | கார்த்தியை இயக்க போகும் கவுதம் மேனன் |
மலையாள திரையுலகில் வில்லன், குணச்சித்திர நடிகர் என கடந்த 30 வருடங்களாக பயணித்து வருபவர் நடிகர் மனோஜ் கே.ஜெயன். தமிழிலும் திருப்பாச்சி, தூள், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரது தந்தை பிரபல இசையமைப்பாளர் கே.ஜி ஜெயன் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார். இவரது மரணத்தின்போது மனோஜ் கே ஜெயனின் மனைவி ஆஷா தாங்க முடியாமல் கதறி அழுத வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியானது.
பல பேர் அவரது பாச உணர்வு குறித்து பாராட்டுகளை வெளிப்படுத்தினாலும், சிலர் ஒரு மருமகள் எப்படி தன் மாமனார் இறந்ததற்காக இப்படி கண்ணீர் விட்டு கதற முடியும் என்று விமர்சனங்களையும் கூறினர். இதனைத் தொடர்ந்து தற்போது மனோஜ் கே.ஜெயன் தனது தந்தை மற்றும் மனைவி உள்ளிட்டோருடன் இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு அவற்றுடன் நெட்டிசன்களுக்கு ஒரு கோரிக்கையையும் வைத்துள்ளார்.
“என்னுடைய மனைவி 15 வயதிலேயே தனது அப்பாவை இழந்து விட்டவர். எங்கள் வீட்டிற்கு அவர் வெறும் மருமகளாக மட்டும் வரவில்லை. என் தந்தையை அவரது தந்தையாகவே அவர் ஏற்றுக்கொண்டார். அவரது இறுதி காலத்தில் அவருக்கான பணிவிடைகள் அனைத்தையும் முகம் சுளிக்காமல் செய்தவர் என்னைவிட மேலாக அவரைப் பார்த்துக் கொண்டவர். அதனால் தான் அவரது மரணத்தை என் மனைவியால் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
நிச்சயம் ஒரு தந்தை மகள் மீது காட்டும் பாசத்தை போல, மகள் தந்தை மீது காட்டும் பாசத்தைப் போல என் மனைவி என் தந்தை மீது காட்டிய பாசமும் புனிதமானது. உறவுகளின் புனிதம் பற்றி எதுவுமே தெரியாதவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள். அவர்களை நாம் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. தயவு செய்து என் மனைவி பற்றி இனியும் அவதூறாக விமர்சிக்காதீர்கள்” என்று உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.