'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் |
மலையாளத்தில் இந்த வருடம் பீல்குட் படங்கள் எண்ணிக்கை என்பது இதுவரை குறைவாகத்தான் வந்துள்ளது. ரேக சித்திரம், ஆபிசர் ஆன் டூட்டி என இன்வெஸ்டிகேஷன் படங்கள் தான் தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றியை பெற்று வருகின்றன. இந்த நிலையில் வரும் மார்ச் 27ம் தேதி மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் லூசிபர் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள எம்புரான் திரைப்படம் வெளியாக இருக்கிறது. சொல்லவே தேவையில்லை இது எப்படிப்பட்ட கமர்சியல் ஆக்ஷன் படம் என்று.
இதைத்தொடர்ந்து அடுத்ததாக ஏப்ரல் 10-ம் தேதி சித்திரை விசு கொண்டாட்டமாக மம்முட்டி நடித்துள்ள பஷூக்கா என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் டினோ டென்னிஸ் இயக்கியுள்ளார். இவர் மறைந்த பிரபல மலையாள கதாசிரியரும், இயக்குனருமான கலூர் டென்னிஸ் என்பவரின் மகன் தான். இந்த படமும் அதிரடி ஆக்ஷன் படமாகவே உருவாகியுள்ளது. இதில் கவுதம் மேனன் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். அந்த வகையில் இனி வரும் அடுத்தடுத்த நாட்களில் மலையாள திரையுலகம் ஆக்ஷன் மோடுக்கு மாற இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டது.