'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சின்னத்திரை பிரபலமான மணிமேகலை வீடு மேல் வீடு, ஒன்றுக்கு இரண்டு கார்கள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட மணிமேகலையை அன்று உற்றார் உறவினரும் சரி, ரசிகர்களும் சரி கடிந்து தான் பேசினார்கள். இவர்கள் திருமணம் நடந்து சில ஆண்டுகளில் ஹூசைன் மணிமேகலை இருவருமே மிகவும் கஷ்டப்பட்டார்கள். ஆனால், தற்போது சொந்த ஊரில் பண்ணை வீடு, சென்னையில் அப்பார்ட்மெண்ட் வீடுகள், இரண்டு சொகுசு கார்கள் மற்றும் விலையுயர்ந்த பைக் என சாதித்து காட்டியுள்ளனர்.
இந்நிலையில், மணிமேகலை தனது சமீபத்திய பேட்டி ஒன்றில், 'நாங்கள் முதலில் ஐ-20 கார் வைத்திருந்தோம். அதற்கு மூன்று மாதங்கள் தவணை கட்டவில்லை என்று காரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். அப்போது நாங்கள் முடிவெடுத்தோம். அடுத்த நான்கு வருடத்திற்குள் பிம்டபிள்யூ கார் வாங்க வேண்டும் என்று. ஆனால், இரண்டரை வருடத்திலேயே அது நடந்துவிட்டது. அதேபோல் சென்னையில் வாடகை வீட்டிலும் பிரச்னை வந்தது. இப்போது வீடு வாங்கிவிட்டோம். இந்த கஷ்டமான நேரத்தில் என்னுடன் இருந்து எனக்கு ஆறுதல் தந்தது ஹுசைன் தான். அவரது ஆதரவினால் தான் நான் இன்றும் மீடியாவில் நிலைத்து நிற்கிறேன்' என மணிமேகலை அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.