பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

தற்போது தனுஷ் இயக்கி நடித்துவரும் 'இட்லிக்கடை' படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் நிலையில், சேகர் கம்முலா இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'குபேரா' படம் ஜூன் மாதம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் தற்போது ஹிந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கும் 'தேரே இஷ்க் மெயின்' என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தின் படப்பிடிப்பு டில்லியில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தை முடித்ததும் அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 55வது படத்தில் நடிக்க போகிறார் தனுஷ். அந்த படத்தை மதுரை அன்புச் செழியனின் மகள் தயாரிக்கிறார். தற்போது அப்படத்தின் ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. மேலும், அமரன் படத்தை ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் கதையில் இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி, தனுஷ் நடிக்கும் இந்த படத்தையும் இன்னொரு பயோபிக் கதையில் இயக்கப் போகிறாராம். இப்படம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.




