இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

1980 - 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரூபினி, ரஜினியுடன் 'மனிதன், ராஜா சின்ன ரோஜா' போன்ற படங்களில் நடித்தவர், கமலுடன் 'அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன்' மற்றும் விஜயகாந்துடன் 'புலன் விசாரணை' என பல ஹிட் படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்வதற்கு, அங்குள்ள விடுதியில் தங்குவதற்கு என சரவணன் என்ற நபர் ரூபினிடத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய் வாங்கி இருக்கிறார். ஆனால் அதையடுத்து திருப்பதி கோவிலில் தரிசனம் செய்வதற்கு எந்த ஏற்பாடும் செய்யாத அந்த நபர் திடீரென்று தலைமறைவாகி விட்டாராம். இதை அடுத்து தன்னை சரவணன் என்ற அந்த நபர் தன்னை மோசடி செய்துவிட்டதை அறிந்த ரூபினி, கடவுளின் பெயரை சொல்லி மோசடி செய்த அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆந்திர அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.