அரச கட்டளை, என் ஜீவன் பாடுது, லியோ : ஞாயிறு திரைப்படங்கள் | நல்ல நடிகையாகவே இருக்க ஆசை திரை வண்ணக்கனவுகளுடன் வர்ஷினி | தமிழ் ரசிகர்களை நம்பினேன் : 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா | 'விஜ்ஜ்ஜஜஜு…….' யார் தெரியுமா ? | மீண்டும் இணைந்த களவாணி கூட்டணி | லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் சூரி : இயக்குனர் யார்? | குபேரா படத்தின் 8 நாள் வசூல் என்ன | இலியானாவுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது | 35 லட்சம் பேக் : கயாடு பதில் சொல்வாரா | விஷ்ணு விஷால் குடும்ப கதையை சினிமாவாக எடுக்கலாம் போல |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கான். ஏற்கனவே இவருக்கு இரண்டு முறை திருமணமாகி, மனைவிகளை பிரிந்துவிட்டார். முதல் மனைவி ரீனா தத்தாவை 1986ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜுனைத், ஐரா என்ற மகன், மகள் உள்ளனர். 2002ல் ரீனாவை பிரிந்த அமீர் அதன்பின் 2005ல் கிரண் ராவ்வை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் 2021ல் கிரணையும் பிரிந்தார் அமீர். அதன்பின் நடிகை ஒருவருடன் ரிலேஷன் ஷிப்பில் இருந்தார்.
தற்போது 60வயதை எட்டி உள்ள தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தனது புதிய காதலியான கவுரியை அறிமுகம் செய்துள்ளார். அமீர்கான் கூறுகையில் ‛‛நானும், கவுரியும் 25 ஆண்டுகளுக்கு முன் சந்தித்தோம். ஒன்றரை ஆண்டுகளாக சேர்ந்து வாழ்கிறோம். 60 வயதில் எனது திருமணம் மகிழ்ச்சியை தருமா என தெரியவில்லை. ஆனால் என் பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். என் முன்னாள் மனைவிகளுடன் நல்ல உறவில் இருக்கிறேன். எங்களது உறவால் குடும்பத்தில் மகிழ்ச்சியே'' என்றார்.