ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான திலீப் நேற்று சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவர் விதிமுறைகளுக்கு மாறாக போலீஸ் பாதுகாப்புடன் சென்றதுடன் அரிவராசனம் பாடல் முடியும் வரை அவர் சாமி தரிசனம் செய்துள்ளார்.
இது நேற்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. பாலியல் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் பந்தாவாக எப்படி சாமி தரிசனம் செய்தார். எதனால் அவருக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டது. ஐயப்பனுக்கு முன் அனைவரும் சமம் என்பதே சபரிமலை கோட்பாடு, அதை மீறியது எப்படி என்று கேள்வி எழுப்பினர்.
இச்சம்பவம் குறித்து நேற்று கேரள உயர்நீதிமன்றத்தின் தேவஸ்தான சிறப்பு அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது போலீஸ் பாதுகாப்புடன் நடிகர் திலீப் சன்னிதானத்திற்கு வந்தது எப்படி? என கேள்வி எழுப்பிய சிறப்பு அமர்வு நீதிபதிகள், அரிவராசனம் பாடல் முடியும் வரை நடிகர் திலீப்பிற்கு சன்னிதானத்தில் வி.ஐ.பி. தரிசனத்திற்கு அனுமதி கிடைத்தது எப்படி? என்ற கேள்வியையும் எழுப்பினர்.
சம்பவம் குறித்து தேவஸ்தான ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு இருப்பதாக தேவஸ்தானம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேவசம் போர்டுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.