அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கடந்தாண்டு விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கினார் வெங்கட்பிரபு. இதன்பின் இவரது அடுத்த படம் பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், சிவகார்த்திகேயன், அக்ஷய் குமார் போன்ற நடிகர்களுடன் வெங்கட் பிரபு பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன.
இந்த நிலையில் வெங்கட் பிரபு ஹிந்தியில் படம் இயக்குவதற்காக சில மாதங்களாக அக்ஷய் குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இப்போது அக்ஷய் குமார் இவர் இயக்கத்தில் நடிக்கிறேன் என கூறி உள்ளாராம். அதேசமயம் அவர் கைவசம் உள்ள படங்களை முடித்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க 10 மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.