ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்ட பிரபாஸ் | மீண்டும் ஷாரூக்கான் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | ஆளே இல்லாத நடிகர் சூர்யா வீட்டுக்கு பாதுகாப்பு : அமைச்சரின் பரிந்துரையில் கட்டணமின்றி சலுகை | இளையராஜாவை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் | ஆவேசம் பஹத் பாசில் பாணியில் ரிலீஸ் தேதியை அறிவித்த விஸ்வக் சென் | சூர்யா படத்தில் கதாநாயகியாக இணையும் பூஜா ஹெக்டே | புஷ்பா 2 வில் இருந்து விலகிய எடிட்டர் ஆண்டனி ரூபன் ? | ஜீத்து ஜோசப் டைரக்ஷனில் பஹத் பாசில் படம் அறிவிப்பு | கரகாட்டக்காரன் 2 வருமா - ராமராஜன் பதில் | எலெக்ஷனால் தள்ளிப்போகும் 'எமெர்ஜென்சி' |
லியோ படத்தை அடுத்து ரஜினியின் 171வது படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தின் ஆரம்ப கட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்கள். அதில், ரஜினியின் கைகள் கைக்கடிகாரத்தால் கட்டப்பட்டிருந்ததால், இது டைம் டிராவல் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என்கிற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது குறித்து லோகேஷ் கனகராஜ் கூறுகையில், ‛‛ரஜினி 171 வது படத்தின் போஸ்டரில் கடிகாரங்கள் இருப்பதால் டைம் லைன் கதையாக இருக்கலாம் என்று பலரும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் நான் இந்த படத்திற்கு வேறு மாதிரியான கதை எழுதி வைத்திருக்கிறேன். அதோடு இந்த படத்தில் ரஜினியை இதற்கு முன்பு பார்த்திராத வகையில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தப் போகிறேன். இந்த படம் 100 சதவீதம் என்னுடைய படமாகத்தான் இருக்க போகிறது'' என்கிறார் லோகேஷ் கனகராஜ்.