'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛தீயவர் குலை நடுங்க' | படப்பிடிப்புக்காக ஹனிமூனை மாற்றிய ஹீரோ |

சினிமாவிலும், சமூக வலைத்தளங்களிலும் அரசியல் பேசி வந்த கங்கனா ரணவத் தற்போது நேரடி அரசியலில் குதித்துள்ளார். தனது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் கண்டி தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேட்புமனு தாக்கல் செய்த அவர் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'எமெர்ஜென்சி' படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. வருகிற ஜூன் 14ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்த படம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்படுவதாக கங்கனா அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவரது தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது : கங்கனா நாட்டிற்கான மிகப்பெரிய பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துத் தேர்தல் களத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார். நாட்டிற்கான பணியே முதன்மையானது என்பதால் அதை முடித்துவிட்டு தனது 'எமர்ஜென்சி' படத்தில் கவனம் செலுத்துவார். இதனால், ஜூன் 14ம் தேதி வெளியாகவிருந்த 'எமர்ஜென்சி' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் குறித்த மறுஅறிவிப்பு வெளியாகும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எமெர்ஜென்சி படம் முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அவசரநிலை பிரகடனம்(எமெர்ஜென்சி) மற்றும் அதையொட்டி நடந்த சம்பவங்களின் பின்னணியில் உருவாகி உள்ளது. இதில் இந்திரா வேடத்தில் கங்கனா நடித்துள்ளார்.