ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பத்ம விருதுகள் வழங்கும் விழா, டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த மே 9 அன்று விஜயகாந்துக்கு விருது வழங்கப்பட்டது.
நடிகர் விஜயகாந்த்திற்கு பத்மபூஷன் விருது கொடுக்கப்பட்டதற்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛என்னுடைய அருமை நண்பர் விஜயகாந்த்க்கு பத்மபூஷன் விருது கொடுத்து கவுரவித்ததில் நமக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சி. அதுமட்டுமில்லாமல் பத்ம விருதுகள் 2024 புத்தகத்தில் அவருடைய வரலாற்றை பதிவிட்டிருக்கிறார்கள். அது அவருடைய பெயருக்கு இன்னும் பெருமை சேர்க்கிறது.
விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை இன்னும் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. திடீரென்று தோன்றி பல சாதனைகள் செய்து அப்படியே மறைந்துவிட்டார். இனிமேல் விஜயகாந்த் போன்ற ஒருவரை பார்க்கவே முடியாது. அவரை மிகவும் மிஸ் செய்கிறேன். மதுரையில் பிறந்த மதுரை வீரன் கேப்டன் விஜயகாந்த் நாமம் வாழ்க'' என தெரிவித்துள்ளார்.
அபுதாபி புறப்பட்ட ரஜினி
‛வேட்டையன்' படத்தில் நடித்துவரும் ரஜினிகாந்த், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‛கூலி' படத்தில் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரம் துவங்கும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து அபுதாபி செல்லும் விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார். ஒரு வாரம் அபுதாபியில் தங்கி இருந்து ஓய்வெடுக்க ரஜினி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் ரஜினியை கண்டதும் ரசிகர்கள் உற்சாகமாக முழக்கமிட்டனர்.