2025 பொங்கல் போட்டியில் அப்பா, மகன்? | தனது முந்தைய வசூலை முறியடிப்பாரா 'வேட்டையன் ' ரஜினிகாந்த் | 'வேட்டையன்' படமே கடைசி : வீடுகளாக மாறப் போகும் உதயம் தியேட்டர் | 'தேவரா' வசூல், வரவேற்பு : வருத்தத்தில் என்டிஆர் | குறைந்து போன ஓடிடி, சாட்டிலைட் உரிமை விற்பனை | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் மிஷ்கின் | இயக்குனர் ஆனார் பிரபல படத்தொகுப்பாளர் | பிளாஷ்பேக் : ‛டேய் இது இங்கிலீஷ் குரூப்புடா...' - பொன்மனச் செல்வன் படப்பிடிப்பில் விஜயகாந்த் கலாட்டா | தன் பெயரில் பண மோசடி விளம்பரம் : பாடகி சித்ரா எச்சரிக்கை | தாதாவுடன் பார்ட்டியில் கலந்து கொண்டேனா? - பிரயாகா மார்டின் விளக்கம் |
உலக புகழ்பெற்ற பேன்டசி த்ரில்லர் படம் 'லார்ட் ஆப் தி ரிங்ஸ்'. பல பாகங்களாக வெளிவந்த இந்த படத்தின் தொடர்ச்சி 'தி ரிங்ஸ் ஆப் பவர்' என்ற தலைப்பில் வெப் தொடராக ஓடிடி தளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இதன் இரண்டாவது சீசன் வருகிற 29ம் தேதி முதல் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாக உள்ளது.
'தி ரிங்க்ஸ் ஆப் பவர்' சீசன் இரண்டில், சவுரன் மீண்டும் தோன்றுகிறார். கெலட்ரியலால் வெளியேற்றப்பட்டு எந்த ஒரு ராணுவம் அல்லது கூட்டாளியும் இல்லாமல் தனித்து விடப்பட்ட அவர் இந்த சீசனில் தான் இழந்த தனது வலிமையை மீண்டும் மீட்டெடுக்கவும் 'மிடில் எர்த்'தின் அனைத்து மக்களையும் தனது வஞ்சக எண்ணங்களுக்கு கீழ்ப்படிய வைத்து கட்டுப்படுத்தவும், அதற்காக அவர் ரிங் ஆப் பவரை உருவாக்குவதும்தான் இந்த சீசனின் கதை.
இந்த இரண்டாவது சீசன், ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியாகிறது. இது மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை கால கொண்டாட்டமாக அமையும்.