2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' |

பாகுபலி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ராணா. அதைத்தொடர்ந்து அவரைப் பெரிய அளவில் முன்னணி நடிகராக உயர்த்தி பிடிக்கும் அளவிற்கு அவருக்கு படங்கள் எதுவும் அமையவில்லை. அதனால் வெப்சீரிஸ் பக்கமும் தனது கவனத்தை திரும்பிய ராணா கடந்த வருடம் வெளியான 'ராணா நாயுடு' என்கிற வெப்சீரிஸில் நடித்தார். இதில் இவருடன் நடிகர் வெங்கடேஷும் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்திருந்தார். சுபன் வர்மா என்பவர் இயக்கியிருந்தார்.
இந்த வெப் சீரிஸில் அதிகப்படியான கெட்ட வார்த்தைகள் பேசப்பட்டதற்காக கடுமையான விமர்சனங்களை இந்த வெப்சீரிஸ் வெளியான சமயத்தில் சந்தித்தது. ஆனாலும் ஓரளவுக்கு வரவேற்பையும் பெற்றது. இந்த நிலையில் வரும் மார்ச் 25ம் தேதி இந்த வெப் சீரிஸில் இரண்டாவது சீசன் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பில் ராணா இணைந்து நடித்து வருகிறார். இதனை முடித்துக் கொடுத்துவிட்டு 'ராணா நாயுடு-2' படப்பிடிப்பில் இணைய உள்ளார் என்று சொல்லப்படுகிறது.




