அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் |
அந்த காலத்தில் ஒலிசித்திரம் என்ற பெயரில் ஒரு படத்தின் வசனத்தை மட்டும் ஒலிபரப்புவார்கள். திருவிளையாடல், சரஸ்வதி சபதம், மதுரை வீரன், வீரபாண்டிய கட்டபொம்மன், பட்டிக்காடா பட்டணமா, பிற்காலத்தில் விதி, திரிசூலம், கவுரவம் உள்ளிட்ட படங்கள் ஒலிசித்திரத்தின் மூலம்தான் மக்களிடம் அதிக அளவில் சென்றடைந்தது.
இந்த கான்செப்டில் உருவானதுதான் ஆடியோ ஓடிடி. ரீஜனல் ஸ்டோரி டெல்லர்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெங்கடாசலம் 'ரேடியோ ரூம்' என்ற பெயரில் இதனை தொடங்கி உள்ளார். இதன் துவக்க விழா நடந்தது. இதில் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, இயக்குநர் சசி, இயக்குநர் ஸ்டான்லி, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் நடிகர் ஜான் விஜய் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஓடிடி மூலம் முதலில் கதைகளும், நாவல்களும் ஆடியோ நாடகங்களாக மாற்றப்பட்டு பொருத்தமான குரல்கள், இதற்காகவே உருவாக்கிய இசை மற்றும் சிறப்பு சப்தங்கள் சேர்க்கப்பட்டு வெளியிடப்படுகிறது. பழம்பெரும் எழுத்தாளர்களின் கதைகளும், நடுத்தர கால மற்றும் சமகால எழுத்தாளர்களின் படைப்புகளும் உள்ளன. அறிமுக மற்றும் இளம் எழுத்தாளர்களின் கதைகளும், தமிழ் கதைகளும் ஈழத் தமிழ் கதைகளும் இடம் பெற்றுள்ளன. தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட கதைகளும் தயாரிப்பில் உள்ளன. தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்களின் ஆடியோக்களை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.