50 நாளை நிறைவு செய்த 'புஷ்பா 2' | அரசியலுக்கு வருகிறாரா திரிஷா? லேட்டஸ்ட் தகவல் | ராஜமவுலி படத்துக்காக சிங்கத்துடன் சண்டை போடும் மகேஷ் பாபு! | ஹிந்தி ஆடியன்சை குறி வைக்கும் நாகசைதன்யா- சாய் பல்லவியின் தண்டேல்! | ஆங்கிலத்திலும் வெளியாகும் ரஜினியின் ஜெயிலர்-2 | அஜித்துக்கு பத்மபூஷண்…. வாழ்த்துவதில் ஏன் பாரபட்சம்…. | பிளாஷ்பேக்: சாதுர்யமிக்க இயக்கத்தால் சாதனை படைத்த “சாந்த சக்குபாய்” | விஜய்யின் கடைசி படம் ‛ஜனநாயகன்': பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | ‛‛நீங்க எல்லாரும் இல்லாம விருது கிடைத்திருக்காது'': பத்ம பூஷன் விருது பெற்றி ஷோபனா நெகிழ்ச்சி | ‛மஜா' பட இயக்குனர் ஷபி மறைவு |
தெலுங்கு சினிமாவில் 2002ம் ஆண்டு ஈஸ்வர் என்ற படத்தில் அறிமுகமானவர் பிரபாஸ். அதன் பிறகு வருஷம், சத்ரபதி, டார்லிங், பில்லா என பல படங்களில் நடித்து வந்தவருக்கு ராஜமவுலியின் பாகுபலி படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பாகுபலி- 2 படத்திற்கு பிறகு சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஸ், சலார் போன்ற படங்களில் நடித்த பிரபாஸ், தற்போது கல்கி 2898 ஏடி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள ஒரு பதிவு அவரது ரசிகர் வட்டாரத்தில் பரபரப்பு கூட்டி உள்ளது. அதாவது ஒரு ஸ்பெஷல் நபர் நமது வாழ்க்கையில் நுழையப் போகிறார் காத்திருங்கள் என்று பதிவிட்டுள்ளார். இப்படி அவர் ஸ்பெஷல் நபர் என்று குறிப்பிட்டது ஒருவேளை பிரபாஸுக்கு பெண் கிடைத்து விட்டதா? என்று ஒரு தரப்பினரும், ஒருவேளை அடுத்த படத்தை ஸ்பெஷல் நபர்கள் யாரேனும் இயக்கப் போகிறார்களோ? அது குறித்த தகவலை தான் இப்படி கூறியிருக்கிறாரோ என்றும் பிரபாஸ் ரசிகர்கள் பலவிதமான யூகங்களை சோசியல் மீடியாவில் வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.