கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
தமிழில் வெற்றிவேல், கிடாரி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் மலையாள நடிகை நிகிலா விமல். தற்போது மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுதவிர மலையாளத்தில் இன்று வெளியாகி இருக்கும் குருவாயூர் அம்பலநடையில் படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இதில் பிரித்விராஜ்க்கு ஜோடியாக நடித்துள்ள நிகிலா விமல் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொண்டார்.
அப்போது ஒரு பேட்டியில் அவரிடம், சமீப காலமாக மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான மஞ்சும்மேல் பாய்ஸ், ஆவேசம், பிரம்மயுகம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகிகளே இல்லையே.. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நிகிலா விமல், “எல்லா படங்களிலும் கதாநாயகி இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. படத்தின் கதை எந்த கதாபாத்திரங்களை கேட்கிறதோ அவை மட்டுமே இருந்தால் போதும்.. ஆவேசம், மஞ்சும்மேல் பாய்ஸ் படங்களில் அதைத்தான் செய்திருந்தார்கள். எந்த ஒரு கதாபாத்திரத்தையும் தேவையில்லாமல் வலிய திணித்தாள் அது படத்தின் வெற்றியை பாதித்துவிடும். குறிப்பாக கமர்சியல் காரணங்களுக்காக படத்திற்கு கதாநாயகி வேண்டும் என திணிக்கவே கூடாது” என்று தனது கருத்தை ஆணித்தரமாக கூறியுள்ளார் நிகிலா விமல்.