'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இசையமைப்பாளர் இளையராஜாவை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் நேற்று சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த சந்திப்பு குறித்து அவர் கூறுகையில், தமிழர்களின் பெருமை இசைஞானி இளையராஜாவை அன்பின் நிமித்தமாக சந்தித்தோம். பெண் கல்வியையும் உரிமையையும் வலியுறுத்தும் விதமாக தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையால், பெண் கல்வி உரிமைகள் விடுதலை என்னும் தலைப்பில் ஒரு விழிப்புணர்வு பாடல் தயாரிக்கப்பட்டது. அந்த பாடலில் சகோதரி பவதாரணியின் இசை பங்களிப்பு குறித்து நன்றியோடு எடுத்துரைத்தோம். எங்களை அன்போடு வரவேற்று இசையோடு அவர் வழி அனுப்பி வைத்தார் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
அதோடு, மறைந்த பவதாரணியின் இசையில் உருவான பெண் கல்வி உரிமைகள் விடுதலை என்ற பாடலையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த பாடல் பவதாரணி இசையில், சுகிர் தாரணி பாடல் வரிகளில் உருவாகி இருக்கிறது.