ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

பிளஸ்சி இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், பிருத்விராஜ், அமலா பால் மற்றும் பலர் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான மலையாளப் படம் 'ஆடு ஜீவிதம்'. பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் 1724 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.
முதல் நாள் வசூலாக 16 கோடியே 70 லட்சம் வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தை பல சினிமா பிரபலங்களும் பாராட்டியுள்ளனர். நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம், ராஜீவ் மேனன், நடிகர்கள் மாதவன், கவுதம் கார்த்திக், யோகிபாபு, கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளனர்.
படத்தின் வசூல் எப்படியிருந்தாலும் மலையாளத் திரையுலக வரலாற்றில் இப்படம் முத்திரை பதிக்கும் படமாக இருக்கும் என பல சினிமா ஆர்வலர்கள் பாராட்டுகின்றனர்.




