ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' | சூர்யாவின் கங்குவா ரிலீஸ் - இரண்டு தேதிகளை திட்டமிடும் படக்குழு! | டிசம்பரில் வெளியாகும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி! | கிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் அஜித்தின் விடாமுயற்சி! | வாழை படத்தின் இரண்டாம் பாகம்! - மாரி செல்வராஜ் தகவல் | பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய், ரஜினி! | நெருக்கமான காட்சிகளில் நடிப்பது எளிதல்ல - மாளவிகா மோகனன் | ஹிந்தி படத்தின் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் | தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை? |
நடிகர் டேனியல் பாலாஜி நேற்று இரவு மாரடைப்பு காரணமாக திடீர் மரணம் அடைந்தார். அவருடைய மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கமல்ஹாசன், ராதிகா, ஆண்ட்ரியா, ஆர்யா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். பாலாஜி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
டேனியல் பாலாஜியின் சகோதரான மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா அவரது இரங்கலில், “வாழ்க்கை விஷயங்களில் நம்மை நாமே அதிகம் இணைத்துக் கொள்வதில், நேரத்தையும், மனிதர்களையும் புரிந்து கொள்ளும் நாட்களில் இதுவும் ஒன்று. நாம் இன்னும் அதிக நேரம் ஒன்றாக செலவிட்டிருக்க வேண்டும். அமைதியாக ஓய்வெடுங்கள் பாலாஜி சித்தப்பா” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அவரது மறைவுக்கு தெலுங்கு நடிகரான நானி, “சீக்கிரமே போய்விட்டீர்கள், அமைதியாக ஓய்வெடுங்கள் பிரதர்,” என பதிவிட்டுள்ளார்.
சந்தீப் கிஷன், “நான் உதவி இயக்குனராக இருந்த போது என்னிடம் மிகவும் அன்பாக இருந்தவர். நான் ஆர்வமுள்ள ஒரு நடிகன் என்பதை உணர்ந்ததும், அவர் என்னை பல ஆடிஷன்களுக்கு அவரது பெயரைச் சொல்லி அனுப்பி வைத்தார். உங்களையும், உங்களது அன்பான மனதையும் மிஸ் செய்கிறேன் அண்ணா,” எனக் குறிப்பிட்டுள்ளார்.