Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அசிங்கமான, ஆபாசமான வார்த்தைகளுடன் 'ஹாட் ஸ்பாட்' டிரைலர்

20 மார், 2024 - 10:54 IST
எழுத்தின் அளவு:
Hot-Spot-trailer-with-dirty,-obscene-words

தமிழ் சினிமாவில் ஏதாவது ஒரு சர்ச்சை, பரபரப்பை ஏற்படுத்தினால் மட்டுமே அந்தப் படத்தைப் பற்றி ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைக்க முடியும் என சிலர் நினைக்கிறார்கள். அதனால், இலவச விளம்பரம் கிடைத்து படத்தைப் பார்க்கவும் ரசிகர்கள் வருவார்கள் என்று வேண்டுமென்றே சில சர்ச்சைகளை ஏற்படுத்துகிறார்கள்.

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், கலையரசன், சாண்டி, அம்மு அபிராமி, சோபியா, ஜனனி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹாட் ஸ்பாட்' என்ற படத்தின் டிரைலரை இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்கள்.

அதில் ஆபாசமான வசனங்கள், மிக அசிங்கமான வசனங்களும் இடம் பெற்றுள்ளன. யு டியுபில் வெளியாகும் வீடியோக்களுக்கு சென்சார் இல்லை என்பதால் இப்படி அனைவரும் வெளியிட்டால் என்ன ஆகும் ?. கொஞ்சம் கூட சமூக அக்கறையோ, பொறுப்போ இல்லாமல் இப்படி படம் எடுத்து டிரைலரையும் வெளியிடுபவர்களுக்கு சென்சார் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது.

ஒரு திரைப்படம் உருவானால் அது சென்சாருக்குச் சென்ற பிறகே வெளியிட்டாக வேண்டும். எனவே, இப்படி சர்ச்சைகளுக்காகவும், பரபரப்புக்காவும் டிரைலரை வெளியிடும் படங்களை சென்சார் செய்ய மாட்டோம் என அவர்கள் கூற வேண்டும். அல்லது டிரைலர்களை சென்சார் செய்த பிறகுதான் யு டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்து வெளிவந்த 'லியோ' படத்தின் டிரைலரில் விஜய் ஒரு கெட்ட வார்த்தை பேசியது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரது எதிர்ப்பால் பின்னர் அந்த வார்த்தை நீக்கப்பட்டது.

இந்த படத்தில் டிரைலரின் ஆரம்பத்திலேயே அவர்களாகவே, An “A”dults only film, for matured family audience & youth” என்றும் ஒரு கார்டு போட்டுள்ளார்கள். படத்திற்கு சென்சார் வாங்கிய பின் இப்படி போட்டார்களா அல்லது விளம்பரத்தில் புதுமை செய்கிறோம் எனப் போட்டுள்ளார்களா என்பதை சென்சார் குழுவினர் விசாரிக்க வேண்டும். 'மெச்சூர்டு பேமிலி ஆடியன்ஸ், யூத்' என்றால் 'ஏ' படங்களை விரும்பிப் பார்ப்பார்கள் என்று சொல்ல வருகிறதா இப்படக் குழு.

இந்த 'ஹாட் ஸ்பாட்' பட டிரைலர் விவகாரத்தில் சென்சார் குழுவினர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் ?.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
'ரத்னம்' இசை வெளியீடு : மாநாடு நடத்த விஷால் திட்டம் ?'ரத்னம்' இசை வெளியீடு : மாநாடு ... 'அபூர்வ சிங்கீதம்' மூலம் சிங்கீதம் சீனிவாசராவுக்கு காணிக்கை செலுத்திய கமல் 'அபூர்வ சிங்கீதம்' மூலம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
21 மார், 2024 - 08:03 Report Abuse
ديفيد رافائيل நீங்க இந்த news போடாம இருந்தாலும்கூட யாருக்குமே தெரிய வராது.
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
21 மார், 2024 - 05:03 Report Abuse
Mani . V மொத்தக் கூட்டத்தையும் அள்ளி சிறையில் போட்டு நொங்கணும்.
Rate this:
BalaG -  ( Posted via: Dinamalar Android App )
21 மார், 2024 - 03:03 Report Abuse
BalaG ட்ரைலருக்கு சென்சார் வேண்டாம். ட்ரைலர் ரிலீஸ் பண்ணதுக்கு பிறகு அதை ரெவியூ பண்ணி, மோசமான ட்ரைலர் ஆக இருந்தால் படத்தை தடை செய்து விட வேண்டும். எக்காரணம் கொண்டும் ரிலீஸ் செய்ய விட கூடாது. கேவலமான சிந்தனைகளும் எண்ணமும் கொண்ட முட்டாள்கள் தானாக திருந்தும்
Rate this:
இளந்திரையன் வேலந்தாவளம் நீங்க இப்படி ஒரு செய்தியை பதிவிடாமல் இருந்தால்... இந்த trailer யாருக்கும் தெரியாமல் கடந்து போயிருக்கும்... இப்ப பாருங்க ஆளாளுக்கு head phone தேட வெச்சிட்டீங்க.. இலவச விளம்பரம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in