பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

சுந்தர். சி இயக்கம், நடிப்பில் வெளியாகி உள்ள ‛அரண்மனை 4' படம் வரவேற்பை பெற்றுள்ளது. தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைக்கு வந்து மூன்று நாட்களில் 34 கோடி வசூலித்திருக்கிறது. இதனால் சுந்தர் சி உள்ளிட்ட படக்குழுவினர் மகிழ்ச்சி உள்ளனர். இந்த நிலையில் அடுத்தபடியாக ஏற்கனவே தான் இரண்டு பாகங்கள் இயக்கி உள்ள கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கப் போகிறார் சுந்தர். சி.
இப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா ஆகியோர் மீண்டும் இந்த மூன்றாம் பாகத்திலும் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதோடு கலகலப்பு படத்தின் முதல் இரண்டு பாகங்களை போலவே இந்த மூன்றாம் பாகமும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி கதையில் உருவாக போகிறதாம்.




