ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் | அடுத்து கொரோனா வந்தால் சென்னை காலி ; பொள்ளாச்சியில் செட்டில் ஆக ஆசை: விஜய் ஆண்டனி | சாய் பல்லவிக்கு எழுதப்பட்ட கதையில் நடித்த சமந்தா | ஆர்யா 40 : படப்பிடிப்பு நிறைவு | ஜூன் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | எவ்வளவு காலம் முடியுமா அவ்வளவு காலம் கார் ரேஸ் : அஜித் பேட்டி | 'கருப்பு' - இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் | ரூ.230 கோடி வசூலைக் கடந்த 'பெத்தி' | அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் |

பீட்சா, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுபட்டி, இன்று நேற்று நாளை உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்தவர் சிவி குமார். கடந்த 2017ல் மாயவன் படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். தொடர்ந்து இயக்கம், தயாரிப்பில் பயணித்து வரும் இவர் இப்போது ‛மாயா ஒன்' என்ற படத்தை இயக்குகிறார். மாயவன் படத்தில் நடித்த சந்தீப் கிஷனே இதிலும் நாயகனாக நடிக்கிறார். மாயவன் படத்தின் அடுத்தபாகமாக இந்தபடம் தயாராகிறது.
நடிகர் சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று(மே 7) படத்தின் முதல் பார்வை போஸ்டருடன் அவரின் லுக்கையும் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் சந்தீப் கிஷனின் கை சூப்பர் ஹீரோ மாதிரியான கை போன்று உள்ளது. இதை வைத்து பார்க்கையில் இந்தப்படம் சூப்பர் ஹீரோ தொடர்புடையாக படமாக இருக்கலாம் என தெரிகிறது. இதில் வில்லனாக கத்தி பட வில்லனும், பாலிவுட் நடிகருமான நீல் நிதின் முகேஷ் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.