'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஸ்டார்' . அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லால், கைலாசம் கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ரைஸ் ஈஸ்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என இரு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. வருகின்ற மே 10ந் தேதி அன்று திரைக்கு வருகிறது. சினிமாவில் ஸ்டார் ஆக வேண்டும் என்கிற கனவோடு உள்ள ஒரு இளைஞனின் போராட்டமே ஸ்டார் படத்தின் கதை.
சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி இன்னும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்ததாக படக்குழு அறிவித்துள்ளனர்.




